Islamic Widget

March 18, 2011

சிதம்பரம், புவனகிரி நிலை: அ.தி.மு.க., வினர் குழப்பம்

கிள்ளை : கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., தன் வசம் உள்ள சிதம்பரம், புவனகிரி தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுடன், மிகக் குறைந்த தொகுதிகள் ஒதுக்கியதால் அக்கட்சியினர் விரக்தியில் உள்ளனர். சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளைச் சேர்ந்த அக்கட்சியினர் விருப்பமனு அளித்தனர்.
 கடந்த தேர்தலில் சிதம்பரம், புவனகிரி தொகுதியில் அ.தி.மு.க.வும்., காட்டுமன்னார்கோவில் மற்றும் மங்களூர் (தனி) தொகுதிகளில் போட்டியிட்ட கூட்டணி கட்சியான வி.சி., கட்சி வெற்றி பெற்றது. கடலூர் மாவட்டத்தில் கம்யூ., கட்சிகள் மற்றும் ம.தி.மு.க., விற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓட்டு இல்லாததால் அ.தி.மு.க., வை நம்பி கூட்டணி கட்சியினர் உள்ளனர். எனவே இந்த தேர்தலில் சிதம்பரம், புவனகிரி தொகுதிகளுடன் குறைந்தது ஏழு தொகுதிகளாவது அ.தி.மு.க., வசம் இருக்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் உற்சாகத்துடன் காணப்பட்டனர். தற்போது அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதில் சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதிகள் இடம் பெறவில்லை. இதனால் அக்கட்சியினர் மிகவும் தொய்வடைந்துள்ளதுடன், தற்போது கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., கோட்டையாக இருக்கும் இரு தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்த்து விட்டு இருப்பதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.


 Source: Dinamalar

No comments:

Post a Comment