காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த லால் பேட்டை - மானியம் ஆடூர் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் அருகே லால் பேட்டை - மானியம் ஆடூர் கிராமத்திற்கு செல் லும் 3 கி.மீ., தூர சாலை உள்ளது. மானியம் ஆடூர் கிராம மக்கள் லால் பேட்டை, சிதம்பரம், குமராட்சி பகுதிகளுக்கு செல்ல இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையைத் தவிர்த்து,
வீராணம் ஏரிக் கரை வழியாக லால் பேட்டைக்கு வந்தால் தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியும். இதனால் கால விரயம் ஆவது மட்டுமல்லாது, 5 கி. மீ., சுற்றிச் செல்ல வேண்டும்.மானியம் ஆடூர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து 500க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் லால்பேட்டை அரசு பள்ளிக்கு வருவதற்கும், வியாபாரிகள், பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின் றனர். ஆனால் மொத்த சாலையும் குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி பள்ளம் இருக்கும் இடம் தெரியாததால் சைக்கிளில் பள் ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அடிக்கடி விபத்துக் குள்ளாகி வருகின்றனர். கிராமப் பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
September 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment