Islamic Widget

October 05, 2010

சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு

 
 
சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற
 
 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்;
 
 சுற்றுலா விசாவில் ஓட்டல்
 
 வேலைக்கு சென்றது கண்டுபிடிப்புசென்னையில் இருந்து மலேசியாவுக்கு நேற்றிரவு 12.30 மணிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் கோலாலம்பூர் செல்வதற்காக வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
 
அப்போது கோலாலம்பூர் விமானத்தில் ஏறுவதற்காக காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த 14 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் 22 வயது முதல் 28 வயது வரை இருக்கும்.
 
அவர்கள் கருப்பு பேண்ட்- வெள்ளை சட்டையை சீருடை மாதிரி அணிந்திருந்தனர். இதனால் அவர்கள் மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
மலேசியாவுக்கு எதற்காக செல்கிறீர்கள்? என்று அவர்களிடம் குடியுரிமை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அந்த 14 வாலிபர்களும் ஓட்டலில் வேலை பார்க்க செல்கிறோம் என்றனர். இதைக்கேட்டதும் குடியுரிமை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
 
ஏனெனில் 14 வாலிபர்களிடமும் கோலாலம்பூரில் ஒரு மாதம் மட்டுமே தங்கி இருக்கக்கூடிய சுற்றுலா விசாவே இருந்தது. இந்த விசாபெற்று வேலைக்கு செல்ல முடியாது என்று 14 வாலிபர்களையும் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
 
பிறகு 14 வாலிபர்களின் கோலாலம்பூர் பயணத்தை குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர். இதைத் தொடர்ந்து 14 வாலிபர்களும் வெளியில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
 
குடியுரிமை அதிகாரிகள் நடவடிக்கையால் 14 வாலிபர்களும் அதிர்ச்சி அடைந்தனர். வெளியில் வந்து அவர்கள் கூச்சலிட்டதால் விமான நிலையத்தில் சுமார் 15 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.
 
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது 14 வாலிபர்களிடமும் சந்திரசேகர் என்பவர் தலா ரூ.10 ஆயிரம் வாங்கிக் கொண்டு கோலாலம்பூர் பயணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது தெரிய வந்தது.
 
சந்திரசேகர் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயார்? என்று போலீசார் அறிவுறுத்தினார்கள். ஆனால் 14 வாலிபர்களும் புகார் கொடுக்க மறுத்து விட்டனர். சந்திரசேகரிடம் தாங்களே பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறி கலைந்து சென்றனர்.
 
Source: maalaimalar

No comments:

Post a Comment