Islamic Widget

October 05, 2010

டெல்டா மாவட்டங்களில் கனமழை

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. இதனால் சம்பா சாகுபடி சிரமமின்றி நடைபெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்  வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக நேற்று டெல்டா





மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை கன மழை பெய்தது.  தொடர்ந்து நேற்று அதிகாலை வரை பரவலாக மிதமான மழை இருந்தது. தஞ்சை, திருவையாறில் இடியுடன் கனமழை கொட்டியது. கோரையாறில் மிக அதிகமாக 142 மி.மீ. மழை பெய்துள்ளது.

இதேபோல் திருவாரூர், நாகை மாவட்டங்களில் நேற்று முன்தினம் விடிய, விடிய பரவலாக மழை பெய்தது. இம்மாவட்டங்களில் 24 மணி நேர மழை, வெள்ள கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 2 நாள் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மேலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி சிரமமின்றி நடைபெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீ): கல்லணை 9.2, திருக்காட்டுப்பள்ளி 5.2, திருவையாறு 40.5, தஞ்சை 122, அய்யம்பேட்டை 18, பாபநாசம் 28, கும்பகோணம் 5, வலங்கைமான் 8.4, குடவாசல் 6.2, கீழணை 5, மயிலாடுதுறை 7.8, மஞ்சளாறு 2, நீடாமங்கலம் 67.6, கோரையாறு 142, பண்டாரவாடை 14.8, திருத்துறைப்பூண்டி 7.8, திருவாரூர் 2.3, தலைஞாயிறு 26.4, முத்துபேட்டை 18.4, திருப்பூண்டி 6, நெய்வாசல் தென்பாதி 44, மன்னார்குடி 50, வேதாரண்யம் 26, பூதலூர் 16.2, வெட்டிக்காடு 4.4, ஒரத்தநாடு 31.4, மதுக்கூர் 3.4, பட்டுக்கோட்டை 6.5, புள்ளம்பாடி 10.6, நந்தியாறு 7, திருமானூர் 35, லால்குடி 6.4, குளித்தலை 3.2, மாயனூர் 3, மேலணை 2.6, சமயபுரம் 27.5.

No comments:

Post a Comment