சென்னை : சென்னை தி.நகரில் இருந்து முகப்பேர் மேற்கு செல்லும் 147பி மாநகர பஸ், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் குமரவேல் ஓட்டினார். குமார் என்பவர் கண்டக்டராக இருந்தார். திருமங்கலம் அடுத்துள்ள கலெக்டர் நகர் பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றது. அப்போது பஸ்சுக்கு பின்னால் நின்ற கார் டிரைவர், ஹாரன் அடித்துக்கொண்டே இருந்தார். பயணிகள் இறங்கிக் கொண்டிருந்ததால் டிரைவரால் பஸ்சை எடுக்க முடியவில்லை.
ஓவர்டேக் செய்து வந்த கார், பஸ் முன்பு நின்றது. அதிலிருந்து இறங்கிய சிலர், பஸ்சில் ஏறி, நாங்கள் ஹாரன் அடித்தும் ஏன் வழி விடவில்லை என்று கூறி டிரைவரை தாக்கினர். தட்டிக்கேட்ட கண்டக்டரையும் அடித்து உதைத்தனர். பஸ் கண்ணாடிகளை நொறுக்கினர். இதனால் பயந்து போன பஸ் பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். அதே நேரத்தில் அந்த கும்பல், செல்போனில் சிலரை தொடர்பு கொண்டு வரவழைத்தது. அவர்கள் வந்ததும் அந்த வழியாக வந்த 40ஏ, 147சி பஸ் கண்ணாடிகளை நொறுக்கினர். பின்னர் அந்த கும்பல் காரில் தப்பிவிட்டது.
டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்டதை அறிந்ததும் சக ஊழியர்கள் விரைந்து வந்து காயமடைந்த 2 பேரையும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் போட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர். இந்நிலையில், சம்பவம் நடந்த அண்ணா நகர் மேற்கு டெப்போவுக்கு நேற்று காலை பணிக்கு வந்த மாநகர போக்குவரத்து ஊழியர்கள் ஒன்று திரண்டனர். பஸ் ஊழியர்களை தாக்கியவர்களை கைது செய்யும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று அறிவித்தனர். கண்டக்டர், டிரைவர்கள் அனைவரும் டெப்போ முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த தகவல் நேற்று காலை 8 மணிக்கு மேல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து மாநகர பஸ் டெம்போவுக்கும் பரவியது. இதையடுத்து சென்னை நகரில் பல இடங்களில் மாநகர பஸ் டிரைவர்களும் கண்டக்டர்களும் பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் குதித்தனர். பல டெப்போக்களில் இருந்து பஸ்களை யாரும் எடுக்கவில்லை.
தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி டிரைவர், கண்டக்டர்களும் ஸ்டிரைக்கில் இறங்கினர். தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம், தி.நகர், திருவான்மியூர், ஆவடி, பூந்தமல்லி, அம்பத்தூர், வடபழனி, படப்பை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்பட எந்த பகுதிக்கும் பஸ்கள் செல்லவில்லை.
தாம்பரம், குரோம்பேட்டை டெப்போவில் 1000க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன. அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி பணிமனைகளில் பஸ்கள் ஓடவில்லை. தாக்குதல் சம்பவம் பரவியதை அடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பள்ளி காலாண்டு விடுமுறை முடிந்து ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு மற்றும் பெருங்களத்தூர், தாம்பரம் பஸ் நிலையத்திலும், சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் வந்திறங்கினர். ஆனால் அவர்கள் தங் களது வீடுகளுக்கு செல்ல பஸ் இல்லாமல் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் தவித்தனர். மாநகர பஸ்கள் இயங்காததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பஸ்கள் ஓடாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் ஸ்தம்பித்தன.
கவுன்சிலர் மகன் உள்பட4 பேர் சிறையில் அடைப்பு
அடிபட்ட பஸ் ஊழியர் சார்பில் செல்வகுமார் என்பவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். அம்பத்தூர் நகராட்சி 37வது வட்ட கவுன்சிலர் அன்பு மகன் செந்தில்சுரேஷ் (27), ஸ்டாலின் (30), முருகன் (30), உதயகுமார் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், பணியில் இருக்கும் அரசு ஊழியரை தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர். பஸ் ஊழியர்களை தாக்கியவர்களை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து நேற்று மதியத்திற்கு மேல் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. ஆனாலும் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்பட்டன.

Source: dinakaran
No comments:
Post a Comment