கடலூர் : சிமென்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கட்டுமான பணிகள் தடைபடாமல் இருக்க மாவட் டத்தில் ஏழு மையங்களில் நேரடியாக சிமென்ட் விற்பனையை மீண்டும் துவக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் தனிநபர் வீடு கட்டுவதும், அரசின் பல்வேறு துறைகள் சார் பில் பாலம், கட்டடங்கள் கட்டும் பணிகள் அதிகம் நடந்து வருகிறது. இதனால் செங்கல், சிமென்ட், கம்பிகள் தேவை அதிகரித்து வருவதால் விலையும் தினம், தினம் உயர்ந்து வருகிறது.
இரண்டு ஆண்டிற்கு முன் சிமென்ட் தேவை அதிகரித்ததால் மூட்டை 280 ரூபாயாக உயர்ந்தது. கட்டுமான பணிகள் தடைபட்டதோடு, கட்டுமான தொழிலாளர்கள் வேலை கிடைக்காத நிலை ஏற்பட் டது. இதனால் சிமென்ட் விலையை கட்டுப்படுத்த அரசை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் போராடின.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சிமென்ட் மூட்டைகளை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் மானிய விலையில் மூட்டை 200 ரூபாய்க்கு விற்க துவங்கியது. அரசின் அதிரடி நடவடிக்கையால் வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட நடுத்தர மக்கள் நிம்மதியடைந்தனர்.
நாளடைவில் சிமென்ட் ஆலைகளில் உற்பத்தி அதிகரித்ததை தொடர்ந்து விலை 145 ரூபாயாக குறைந்தது. இதனால் அரசு கட்டட பணிகளை மேற் கொண்ட கான்ட்ராக் டர்களே வெளி மார்க்கெட் டில் சிமென்ட் வாங்கினர்.
அதனால், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் சிமென்ட் மூட்டை விற் பனை முற்றிலுமாக நின்றது. இந்நிலையில் தமிழக அரசின் "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' கடந்த மாதம் துவங்கியதால் கட்டுமான பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்தது. அதில் சிமென்ட் மூட்டை 280 ரூபாயாக உயர்ந்ததால், நடுத்தர வர்க்கத்தினர் வீடு கட்டும் பணியை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்பட் டது. இதனால் கட்டுமான தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் பாதிக்கப் பட்டுள்ளனர்.
நிலைமையை சமாளிக்க தமிழக அரசு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் மீண்டும் சிமென்ட் விற்பனையை துவங்க உத்தரவிட்டுள்ளது. கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம் மற்றும் காட்டுமன் னார்கோவிலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் சிமென்ட் விற்பனையை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிமென்ட் மூட்டை தேவை உள்ளவர்கள் மூட்டை 200 ரூபாய் எனக் கணக்கிட்டு 50 மூட்டைக் கான தொகையை கடலூர், திருப்பாதிரிப்புலியூர் "ஸ்டேட் பாங்கில்' மாற்றும் வகையில "டிடி' எடுத்து மனுவுடன் இணைந்து அந்தந்த பகுதிகளில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் கொடுத்து பதிவு செய்துக் கொள்ள வேண் டும். புதிதாக வீடு கட்டுபவர்கள் சிமென்ட் மூட்டை அதிகம் (50 மூட்டைக்கு மேல் 400 மூட்டைக்குள்) தேவையெனில் கட்டட வரை படம், உள்ளாட்சி அமைப்பின் அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை மனுவில் இணைக்க வேண்டும்.
இவ்வாறு பதிவு செய் துக் கொண்டவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் சிமென்ட் மூட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் குடோனில் 3.5 டன், சிதம்பரத்தில் 2 டன் சிமென்ட் மூட்டைகள் இருப்பு உள்ளது. பிற குடோன்களில் போதிய அளவில் சிமென்ட் மூட்டைகள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து அரசு குடோன்களில் சிமென்ட் மூட்டை விற்பனை துவங்கப்பட உள்ளது.
Source: Dinamalar
October 05, 2010
அரசு குடோன்களில் சிமென்ட் விற்பனை மீண்டும் : விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- இறப்புச்செய்தி
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- 'மக்கா புனித கஃபா சிலகாட்சிகள்
- மய்யத் செய்தி
- ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு
- சிதம்பரத்தில் போலி டாக்டர் கைது
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
- அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதி கைது
No comments:
Post a Comment