கடலூர் : ஹஜ் பயணம் மேற் கொள்ள உள்ளவர்களுக்கு சுகாதாரத்துறை இயக் குனர் அலுவலகத்தில் நேற்று தடுப்பூசி போடப் பட்டது.
தமிழக ஹஜ் கமிட்டி மூலம் தேர்வு செய்து ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 190 பேருக்கு பயணத்தின் போது மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் தாக் காமல் இருப்பதற்காக கடலூரில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் தடுப்பூசி போடப்பட்டது.
அப்போது, தனியார் ஏஜன்சி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள 30 பேர், தங்களுக்கும் தடுப்பூசி போடவேண் டும் என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீராவிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், ஹஜ் கமிட்டியினரால் தேர்வானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். ஏஜன்சிகள் மூலம் செல்பவர்கள் சென்னையில் போட்டுக் கொள்ள வேண்டும்' எனக் கூறினார். அதனை அவர் கள் ஏற்க மறுத்து அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின் னர் கலெக்டரை சந்தித்து முறையிட்டதைத் தொடர்ந்து அனைவருக் கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது
Source: Dinamalar
No comments:
Post a Comment