Islamic Widget

October 05, 2010

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை-பலத்த மழை பெய்யும்

Satellitte Image Oct 05சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் கடலோரப் பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 12.30 மணிக்கு கன மழை பெய்தது.

வட கிழக்கு பருவ மழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான அறிகுறியாக தமிழகத்தி்ல் அங்காங்கு திடீர் மழை பெய்து வருகிறது.

Source: thatstamil

No comments:

Post a Comment