டெல்லி: அயோத்தி தீர்ப்பை எதிர்த்து இன்னும் ஒரு மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது சன்னி மத்திய வக்பு வாரியம்.
இந்த அப்பீல் மனுவில் கீழ்க்கண்ட விஷயங்களை முன்வைக்கவுள்ளது வக்பு வாரியம் எனத் தெரிகிறது.
1. ராமர் பிறப்பிடத்தை முடிவு செய்ய நம்பிக்கையை அடிப்படை ஆதாரமாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் எடுத்துக்கொண்டிருப்பது செல்லாது.
2. 1949ம் ஆண்டு ராமர் சிலையை ரகசியமாக மசூதிக்குள் வைக்கும் வரை மசூதியின் உட்பகுதியை முஸ்லீ்ம்கள்தான் தங்களது கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தனர்.
3. இஸ்லாம் நெறிமுறைக்களுக்குட்பட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்தது.
இவற்றை முன்வைத்து தங்களது மேல் முறையீட்டைமேற்கொள்ள வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே அப்பீல் மனு தொடர்பாக அக்டோபர் 9ம் தேதி டெல்லியில் தனது சட்டக் கமிட்டியின் கூட்டத்தைக் கூட்டியுள்ளது அகில இந்திய முஸ்லீம் தனி சட்ட வாரியம். அதன் பின்னர் அக்டோபர் 16ம் தேதி முடிவை அறிவிக்கவுள்ளது.
இற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி இன்று அயோத்தி தீர்ப்பு குறித்து விவாதிக்கவுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பை வெளியிட்ட பின்னர் முதல் முறையாக இப்போதுதான் காங்கிரஸ் கட்சி இந்த தீர்ப்பு குறித்து விவாதிக்கவுள்ளது. மேலும் காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவரது தலைமையில் நடைபெறவுள்ள முதல் முக்கியக் கூட்டமும் இது என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
Source: thatstamil
October 05, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- இறப்புச்செய்தி
- ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- ஆசியாவின் மிகவும் மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறிய இந்திய ரூபாய்.
- சர்ச்ச்சைக்குரிய இடத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும் : அலகாபாத் கோர்ட் தீர்ப்பு
- முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் அமைப்பினர்(NWF) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- மய்யத் செய்தி
- அயோத்தி வழக்குத் தீர்ப்பு!
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
No comments:
Post a Comment