ஆன்லைனில் சமையல் வாயு முன்பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக சமையல் வாயு உள்ளது. சமையல் வாயு கேட்டு விண்ணப்பித்து வீட்டிற்கு வந்து சேரும் வரை பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
சமையல் வாயு முகவர்களின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்வதற்குள் சமையல் வாயு தீர்ந்து விடும். எப்போது தொடர்பு கொண்டாலும் பெரும்பாலும் இணைப்பு கிடப்பதில்லை இதனால் சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் பதிவு செய்வதற்கும் பெரும் பாடுபட வேண்டி உள்ளது. அதனால் முகவரிடத்தில் நேரில் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. பொதுமக்கள் சமையல் வாயு பெறுவதற்கு படக்கூடிய பல்வேறு சிரமங்கள் குறித்து எண்ணை நிறுவனங்களுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் கியாஸ் புக்கிங் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. http://www.tomogas.com/iocl/index.aspx இந்தியன் எண்ணை நிறுவனத்தின் இண்டேன் வாயு வாடிக்கையாளர்களுக்கு 25-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கணினி அல்லது செல்போன் மூலமாக இண்டேன் சமையல் வாயு வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற பத்து இலக்க எண்ணை பதிவு செய்யவேண்டும். இந்த எண் அனைத்து இண்டேன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.தமிழ் வழியில் பதிவு செய்ய எண்-1, ஆங்கில வழியில் பதிவு செய்ய எண்-2 அழுத்த வேண்டும். நுகர்வோர் எண், செல்போன் எண், வினியோகஸ்தர் எண் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்யவேண்டும். இவ்வாறு 8 நடைமுறைகளை பின்பற்றினால் வாடிக்கையாளர்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்படும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் கியாஸ் புக்கிங் செய்யலாம். தாங்கள் விரும்பிய நேரத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். இதேபோல எச்.பி. வாயு வாடிக்கையாளர்கள் 9092223456 என்ற எண் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் கியாஸ் பதிவு செய்வதில் பெண்கள், வயதானவர்கள், படிக்காதவர்கள் சிரமப்படுகிறார்கள். அவர்கள் எளிதாக பதிவு செய்வதற்கு வழிமுறைகளை சமையல் வாயு முகவர்கள் வழங்கி வருகிறார்கள். இந்த திட்டம் சென்னையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. படிப்படியாக மற்ற நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.

No comments:
Post a Comment