பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரே ஆபத்தான நிலையில் உள்ள பழமையான வேப்ப மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் 70 அடி உயர வேப்பமரம் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி பொதுபணித்துறை அதிகாரிகள் இந்த வேப்ப மரத்தை வெட்ட டெண்டர் விட்டனர். மரத்தை வெட்டினால் அருகில் உள்ள மின்சார லைனில் விழும் என்பதால் டெண்டர் எடுத்தவர் மரத்தை வெட்டாமல் விட்டு விட்டார்.
தற்போது கோடை காலமாக இருப்பதால் மரக்கிளைகள் காய்ந்து கீழே விழுந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மருத்துவமனை அருகிலேயே பஸ் நிறுத்தம் உள்ளதால் மரத்தடியில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத நிலையில் மரம் விழுந்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் நிலை உள்ளது.எனவே ஆபத்தான நிலையில் உள்ள வேப்ப மரத்தை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
source: dinamalar

No comments:
Post a Comment