இன்றிரவும் நாளை இரவும் வானிலிருந்து ஏராளமான எரிகற்கள் பூமியை நோக்கி பாயவுள்ளன.தாட்சர் என்று அழைக்கப்படும் விண் கல்லைச் சுற்றி (இதன் இன்னொரு பெயர் comet C/1861 G1) காணப்படும் தூசி மண்டலத்தில் உள்ள எரிகற்கள் தான் பூமியில் விழ உள்ளன. ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த விண் கல்லின் வால் பகுதியான தூசிப் பாதையில் பூமி நுழைவது வழக்கம்.
அப்போது அதிலுள்ள எரிகற்கள் பூமிக்குள் விழும். இந்த ஆண்டு கடந்த 16ம் தேதி முதல் பூமிக்குள் இந்த எரிகற்கள் விழ ஆரம்பித்துவிட்டன. வரும் 26ம் தேதி வரை அவை விழும் என்றாலும் இன்றிரவும் நாளையும் தான் அதிக அளவி்ல் அவை பூமிக்குள் விழும்.ஈட்டி போல பாயும் இந்த எரிகற்களால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. அவை பூமியின் வளி மண்டலத்தில் நுழையும்போதே பஸ்மாகிவிடு்ம். இவற்றை இன்றும் நாளையும் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும்.அதிகாலைக்கு கொஞ்சம் முன்பாக, வெளிச்சம் மிகக் குறைவான இடங்களில், நிலவின் வெளிச்சமும் மிக மிகக் குறைவாக இருக்கும்போது இதை தெளிவாகப் பார்த்து மகிழலாம்.

No comments:
Post a Comment