பரங்கிப்பேட்டை அருகே ஏற்பட்ட தகராறில் தந்தை, மகனை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்த 6பேரை போலீசார் கைது செய்தனா் மேலும் 2பேரை தேடி வருகின்றனா்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் கிராமத்திற்கு பரங்கிப்பேட்டையை சேர்ந்த சேகர் மனைவி செல்வி (வயது 37).அவரது மகன் ரகு (24) ஆகிய 2 பேரும் சின்னூர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் குட்டியாண்டவர் கோவில் அருகே சென்ற போது பரங்கிப்பேட்டை மாதாகோவில் தெருவை சேர்ந்த சத்தியராஜ் ,வினோத் குமார், முரளி உள்பட 8 பேர் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர்.இதை அந்த வழியாக சென்ற செல்வி தட்டிக்கேட்டார்.இதில் ஆத்திரமடைந்த சத்தியராஜ் மற்றும் சிலர் அவரிடம் வாக்கு வாதம் செய்தனர்.இதை செல்வி மகன் ரகு தட்டிக்கேட்டார்.அவரை சத்தியராஜ், வினோத்குமார், செந்தில்குமார், சரவணன், முரளி , மகேஷ், சுந்தர்ராஜ், சதீஷ் ஆகிய 8 பேரும் தாக்கினர்.சம்பவம் கேள்விபட்டு வந்த ரகுவின் தந்தை சேகரையும் அவர்கள் தாக்கினர்..இந்த தாக்குதலின் போது சலங்குகார தெருவை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான காரை டிரைவர் நடராஜன் அங்கு நிறுத்தினார். இதை பார்த்த சத்தியராஜ் உள்பட 8 பேரும் சேர்ந்து கார் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றனர்.இதற்கிடையில் இந்த தாக்குதலில் காயமடைந்த ரகு,சேகர் ஆகிய 2 பேரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது பற்றி கார் டிரைவர் நடராஜன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சீனு வாசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சத்தியராஜ், செந்தில்குமார், முரளி, மகேஷ், சுந்தர்ராஜ், சதீஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வினோத்குமார், சரவணன் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.June 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை - பாகிஸ்தான்
- இறப்புச்செய்தி
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- அயம் சிங். ஸாங். சவூதி கொலவேரி
- சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை - அரசுக்கு இராமகோபாலன் வேண்டுகோள்
- 'மக்கா புனித கஃபா சிலகாட்சிகள்
- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
No comments:
Post a Comment