Islamic Widget

September 20, 2010

பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது

பரங்கிப்பேட்டை, செப்.20-




பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வீச்சரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, டெல்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமீர்ஜான், போலீஸ் ஏட்டு நடராஜன் மற்றும் போலீசார் ஆலப்பாக்கம் பகுதியில் நேற்று தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் பகுதியில் நின்ற 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். இதை அறிந்த போலீசார் அவர்களை துரத்தி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பண்ருட்டி அனுக்கம் பட்டு கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன்கள் சதாம் பிரபு (வயது 20), கிளின்டன் பிரபு (19), சமுட்டிக்குப்பம் இளைய பெருமாள் மகன் ராமச்சந்திரன் (18) ஆகிய 3 பேர் என்று தெரிய வந்தது.



அதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், 3 பேரும் சேர்ந்து பஸ்சை வழிமறித்து கொள்ளையடிக்க சதிதிட்டம் தீட்டியது தெரிந்தது. அவர்களை சோதனை செய்ததில் வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர். அதை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.



Source: Daily Thanthi

No comments:

Post a Comment