கிள்ளையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடைகள், கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
தமிழகத்தில் சாலைகளை அகலப்படுத்தவும், விபத்தை தடுக்கவும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதேபோல் கிள்ளை கடை வீதி பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சிலர் தாங்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றாத இடங்களில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று அதிரடியாக அகற்றம் செய்தனர்.
கிள்ளை-பொன்னந்திட்டு சாலையில் உள்ள கடைகள், கட்டிடங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையில் சாலையோரத்தில் இருந்த கூரை வீடுகளை அதிகாரிகள் அகற்ற சென்றனர்.
அவர்களிடம் பேரூராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் கற்பனை செல்வம் ஆகியோர் கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே மாற்று இடம் இன்றி, பட்டா இன்றி சாலையோரத்தில் தங்கி இருக்கும் கூரை வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கும் வரை அதனை அகற்ற வேண்டாம் என்று கூறினர். அதன்படி அதிகாரிகள் கூரை வீடுகளை மட்டும் விட்டு விட்டு மீதியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
ஆக்கிரமிப்பின் போது பிரச்சினைகள் ஏதும் நடக்காமல் தடுக்க கிள்ளை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டனர்.
Source: Daily Thanthi
September 19, 2010
கிள்ளையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - கடைகள், கட்டிடங்கள் இடித்து தள்ளப்பட்டது
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
No comments:
Post a Comment