சிதம்பரம் : தீபாவளி பண்டிகையொட்டி சிதம்பரம் நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை சில நாட்களே உள்ள நிலையில் புத்தாடை, நகைகள்,பொருட்கள் வாங்க சுற்றுப்புற கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் சிதம்பரத்திற்கு வருவது அதிகரித்துள்ளது. அதையொட்டி போக்குவரத்தை சீரமைக்கவும்,
பொதுமக்கள் தங்கள் உடமைகளை பாதுகாக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதில் வரும் 1 முதல் 4ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சிதம்பரத்தில் இருந்து கடலூர், புதுச்சேரி, சென்னை செல்லும் பஸ்கள் பச்சையப்பா பள்ளி சந்திப்பு- தெற்கு வீதி- கீழ வீதி, கஞ்சித்தொட்டி வழியாக வெளியில் செல்ல வேண்டும். இதே போல், சென்னை, புதுச்சேரி, கடலூர், விருத்தாசலத்திலிருந்து சிதம்பரம் வரும் பஸ்கள் கஞ்சித்தொட்டி- வடக்கு வீதி பதினாறு கால் மண்டபம் வழியாக, கமலீஸ்வர் கோவில்தெருவில் நுழைந்து பஸ்நிலையம் செல்ல வேண்டும். குறிப்பாக சிதம்பரம் நகரப் பகுதிக்கு வரும் கனரக வாகனங்கள் தவிர மற்ற அனைத்து கனரக வாகனங்கள் சிதம்பரம்- சீர்காழி பைபாஸ் வழியாக திருப்பி விடப்படும். மேலும் மாலை நேரங்களில் மேல வீதி வழியாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. திருட்டை தடுக்கவும், போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் மேல சன்னதி மணிகூண்டு, தெற்கு வீதி, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பைனாக்குலர் மூலமாக கண்காணிப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Source:dinamalar
October 29, 2010
சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி
No comments:
Post a Comment