Islamic Widget

January 12, 2012

கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை


பரங்கிப்பேட்டை:கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

பரங்கிப்பேட்டை அகரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சண்முகம், 47; கட்டடத் தொழிலாளி. இவர் மனைவி சத்தியா, 31. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த 9ம் தேதி சண்முகம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தனது கணவர் திடீரென இறந்து விட்டதாக சத்தியா கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் சந்தேக மரணப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தார்.எஸ்.பி., பகலவன் உத்தரவின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்ததை சத்தியா ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலம்:

என் கணவர் சண்முகம் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, நான் சீர்காழி அடுத்த எருக்கூரில் உள்ள என் தாய் வீட்டில் இருந்தேன். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற சண்முகத்துடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. எனது தாய் கண்டித்தும் எங்கள் தொடர்பு நீடித்தது.இதுகுறித்து என் கணவருக்கு எனது தாயார் தகவல் தெரிவித்தார். அதையடுத்து எனக்கு புத்திமதி கூறி, என் கணவருடன் அனுப்பி வைத்தார்.
கடந்த ஒரு ஆண்டாக பரங்கிப்பேட்டை அகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். எனது கணவர் ஊரில் இல்லாத நேரங்களில் அப்புவை வீட்டிற்கு வரவழைப்பேன். அதுபோல் கடந்த 9ம் தேதி நானும் அப்பு என்கிற சண்முகமும் ஒன்றாக வீட்டில் இருந்ததை, வெளியில் சென்றிருந்த என் கணவர் பார்த்து கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நாங்கள், சண்முகத்தின் முகத்தில் துணியை வைத்து அழுத்தி கொலை செய்தோம்.இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து சந்தேக மரணப் பிரிவின் கீழ் பதியப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி சத்தியா மற்றும் அப்பு என்கிற சண்முகம், 27, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

No comments:

Post a Comment