Islamic Widget

November 25, 2011

கனிமொழி கோரிக்கை ஏற்பு: ஜாமீன் மனு இன்று விசாரணை!

கனிமொழி கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றதைத் தொடர்ந்து, அவரின் ஜாமீன் மனுமீதான விசாரணை டிசம்பர் 1- ஆம் தேதிக்குப் பதிலாக இன்றே நடக்க இருக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலுள்ள நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி உட்பட 6 பேருக்கான ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதனை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீதான விசாரணை வரும் டிசம்பர் 1 ஆம் தேதி நடக்க இருக்கிறது.
இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுனிடெக் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, சுவான் டெலிகான் இயக்குனர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் குழும அதிகாரிகள் ஹரி நாயர், கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா ஆகிய 5 பேருக்கு நேற்றுமுன்தினம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனுக்களை முன்கூட்டியே விசாரிக்குமாறு அவர்கள் சார்பில் நீதிபதி வி.கே.ஷாலியிடம் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

கனிமொழி சார்பில் ஆஜரான முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அல்தாப் அகமது, கரிம் மொரானி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆகியோர், "ஜாமீன் அளிக்கப்பட்ட மற்ற 5 பேருக்குச் சமமான சூழ்நிலையிலோ, அல்லது ஜாமீன் பெற அதைவிட சாதகமான சூழ்நிலையிலோ தான் எங்கள் கட்சிக்காரர்கள் உள்ளனர். எனவே, வாய்ப்பு இருந்தால், எங்கள் கட்சிக்காரர்களின் ஜாமீன் மனுக்களைத் தயவு செய்து இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்' என்று அவர்கள் கூறினர்.

அதற்கு நீதிபதி, "இப்படி பேசினால், நீங்கள் மேலானவர்கள், வலிமையானவர்கள் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு ஏற்படும். எனவே, அதைத் தவிர்த்திடுங்கள்" என்று அறிவுறுத்தியதோடு, "கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறும்" என்று நீதிபதி வி.கே.ஷாலி அறிவித்தார்.
அநேகமாக கனிமொழி உள்ளிட்ட 6 பேருக்கு இன்று ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. mr.ismail where is parangipettai update rain photo.we will eagerly waiting.
    ecrrose

    ReplyDelete