பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே கிராம சாலை வழியாக கிராவல் ஏற்றிச் செல்லும் லாரிகளை தடை செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் பகுதியில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அதற்காக பஞ்சங்குப்பம் கிராம சாலை வழியாக கிராவல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அடிக்கடி சென்று வருகிறது.
இதனால் சாலைகள் பழுதடைந்தும், விபத்துகள் அதிகரிப்பதாகக் கூறி பஞ்சங்குப்பம் கிராம மக்கள் நேற்று அப்பகுதி பிரமுகர் ராமச்சந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் காலை 10 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து 10.30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.November 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- இறப்புச் செய்தி
- தலைவராக டாக்டர்.நூர் முஹம்மத் பொறுப்பேற்றார்.
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- 2012-ம் ஆண்டு கூட்டு ஃபித்ரா ஒரு நபருக்கு ரூ. 50!
- தஞ்சையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய முஸ்லிம்களின் இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- அன்புபரங்கி வாழ் சொந்தங்களே ஒரு அறிவிப்பு
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- தமிழகத்தில் 'பாரத் பந்த்' பிசுபிசுத்தது!
- பேஸ்புக்கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை
- ஜமாஅத் நிர்வாகிகள் பொறுப்பேற்பு

No comments:
Post a Comment