Islamic Widget

May 09, 2012

பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.



தேர்தல் விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்ததால் தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கின் விசாரணை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் 42-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.


அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி போட்டியிட மனு தாக்கல் செய்ததால், அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்குத் தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தது.

அதனடிப்படையில் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்தார்.பின்னர் அவரது மேல்முறையீட்டின்படி உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவுப் பிறப்பித்தது. தடை உத்தரவு காரணமாக, இதுவரை இவ்வழக்கு 41 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதிபதி சரத்ராஜ் இவ்வழக்கை ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். தேர்தல் ஆணையம் சார்பில் இளநிலை உதவியாளர் நடராஜன் ஆஜரானார். அப்போது நீதிபதி சரத்ராஜ், "தேர்தல் அதிகாரி செல்வமணிதான் ஆஜராக வேண்டும். நீங்கள் ஆஜராகக் கூடாது. எனவே அடுத்த முறை வழக்கு விசாரணையின் போது தேர்தல் அதிகாரி செல்வமணி ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்

1 comment:

  1. எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete