Islamic Widget

December 05, 2010

நஷ்டவாளர்கள் யார்?

இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்தவர்கள் யார் என்பது பற்றி குர்ஆனில் 60-க்கு மேற்பட்ட இடங்களில் கூறப்படுகின்றன.


1. ஸூரத்துல் பகரா (பசு மாடு)

2:27 இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள். இவர்களே தாம் நஷ்டவாளிகள்.

2:64 அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.

2:121 யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள். அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள். யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!

3. ஸூரத்துல்ஆல இம்ரான்(இம்ரானின் சந்ததிகள்)

3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந் தோரில் தான் இருப்பார்.

3:149. நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்¢ அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.

4. ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)

4:119 ‘இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன். அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்¢ (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்’ என்றும் ஷைத்தான் கூறினான். எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.

5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)

5:5 இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே! உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே!



முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் – மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.

5:21. (தவிர, அவர்) ‘என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்¢ இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள். (அப்படிச் செய்தால்) நீ;ங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்’ என்றும் கூறினார்.

5:30 (இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று¢ ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.

5:53. (மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்: ‘நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்த வர்கள் இவர்கள் தானா?’ என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களு டைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன. இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.

6. ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்)

6:12 ‘வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்’ என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும்¢ (அவர்கள் என்ன பதில் கூற முடியும்? எனவே) ‘எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்’ என்று கூறுவீராக. அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.

6:20 எவரும் தம் குழந்தைகளை (சந்தேகமில்லாமல் அறிவதைப் போல், வேதங் கொடுக்கப் பெற்றவர்கள், (நம் தூதராகிய இவரை, இறைவனுடைய தூதர் தாம்) என்று நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள் தாம் இவரை நம்பமாட்டார்கள்.

6:31 ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர். அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள். அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

தொடரும்….

No comments:

Post a Comment