சிதம்பரம் நகரில் ஒரே நாளில் இரண்டு வீடுகளில் நகைகள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம் கமலீஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சச்சிதானந்தம்(72). ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். நேற்று முன்தினம் இரவு இவரும் இவருடைய மனைவியும் வீட்டில் உள்ள அறையில் தூங்கி கொண்டு இருந்தனர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்து இருந்தது.
இவர்களது அறைக்கு அருகில் உள்ள மற்றொரு அறை திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகைகளும் ரூ.20 ஆயிரம் பணமும் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சச்சிதானந்தம் சிதம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் டிஎஸ்பி சிவனேசன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டின் மொட்டை மாடியின் வழியாக மர்ம ஆசாமிகள் உள்ளே இறங்கி கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்றொரு சம்பவம்:
சிதம்பரம் பெரியவாணி ய தெருவில் வசித்து வருபவர் ஜூனைனா பேகம் (51). இவரது கணவர் ஷேக் மொய்தீன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஜூனைனாபேகம் அவருடைய மகள்கள் வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்கி உள்ளனர். நேற்று காலை தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 1/2 பவுன் நகைகள் ரூபாய் 5 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கடலூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். ஒரே நாளில் இரண்டு வீடுகளில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது சிதம்பரம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Source: Dinakaran
No comments:
Post a Comment