நாமக்கல்: அயோத்தி தீர்ப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நாளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைக்க நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அயோத்தி வழக்கில் வருகிற 24ம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கவுள்ள இந்த தீர்ப்பை நாடே பெரிதும் எதிர்பார்த்துள்ளது. பலத்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய தினம் சரக்கு லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைக்க நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 24ம் தேதியன்று மாலை 3 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை அனைத்து லாரிகளும் ஓடாது என அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment