சென்னை : நீலாங்கரையில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஸ்வேதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது செல்போனுக்கு ஒருநாள் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் ஏதேதோ பெயர்களை கூறி நான் உங்களுக்கு அறிமுகமானவன் என்று கூறியுள்ளார். உங்களை யார் என்று தெரியவில்லை என்று ஸ்வேதா கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் விடவில்லை. அவ்வப்போது ஸ்வேதாவின் செல்போனுக்கு பேசி உங்கள் வாய்ஸ் ஸ்வீட்டாக உள்ளது. எனவே ரொம்ப அழகாத்தான் இருப்பீர்கள் என்று ஆபாசமாக பேசியுள்ளான்.
அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்பை ஸ்வேதா துண்டித்த போது, ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்ப தொடங்கியுள்ளார். பின்னர் தன்னுடைய விருப்பத்துக்கு இணங்கும்படி ஸ்வேதாவிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் மனம் உடைந்த ஸ்வேதா தனது தந்தையிடம் கூறியுள்ளார். அவரது ஆலோசனை படி, அந்த நபரை பெசன்ட் நகர் பீச்சுக்கு வர செய்தனர். அந்த வாலிபரை ஸ்வேதாவின் உறவினர்கள் பிடித்தனர். அந்த நபர் கொரட்டூரில் டீக்கடை நடத்தி வரும் உலகநாதன் (27) என்பது தெரியவந்தது. அபிராமபுரம் காவல் நிலையத்தில் அவனை ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 23வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ரவி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜரானார். உலகநாதனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
No comments:
Post a Comment