பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதி மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வீடுகள் கட்டிக் கொடுத்தன. ஆனால், பரங்கிப்பேட்டை கொடிமரத்தெரு பகுதி மக்களுக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கவில்லை. சுனாமியில் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து, வெள்ளாற்று கரையோரத்தில் கூரை வீடுகளில் வசித்து வரும் கொடி மரத்தெரு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களில் பாதித்து வந்தனர். பாதுகாப்பான சுனாமி வீடு கட்டித் தரக்கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பேரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 70 பயனாளிகளுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் செலவில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனை கடந்த ஏப்ரல் 5ம் தேதி அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பன்னீர்செல்வம் திறந்து வைத்து, வீட்டின் சாவிகளை பயனாளிகளிடம் ஒப்படைத் தனர். புதிய குடியிருப்பு திறந்து நான்கு மாதங்களாகியும் பெரும்பாலான பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்குச் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். சுனாமி குடியிருப்பிற்கு சென்று விட்டால், இதுவரை தாம் வசித்து வந்த வெள்ளாற்றங்கரையில் உள்ள வீடுகளை அதிகாரிகள் அகற்றி விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக புதிய வீட்டிற்கு செல்லாமல் உள்ளனர்
Source: Dinamalar
September 05, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- இறப்புச் செய்தி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- காவல்துறையை எதிர்கொள்ளவே ஆயுதப் பயிற்சி - ராம்தேவ் உதவியாளர்
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- இறப்பு செய்தி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

No comments:
Post a Comment