ஆரல்வாய்மொழி: தொடர் முகூர்த்தங்கள் மற்றும் வரத்து குறைவு காரணமாக நேற்று பூக்கள் விலை 5 மடங்காக உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை பூ க்ஷீ800க்கு விற்பனை செய்யப்பட்டது.
தோவாளை பூ சந்தையிலிருந்து திருவனந்தபுரம் வழியாக வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆடி மாதம் பிச்சிப்பூ க்ஷீ50 முதல் க்ஷீ70 வரையும், மல்லிகை க்ஷீ100க்கும் விற்பனையாகின. ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது.
பின்னர் விலை படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆவணி மாத தொடர் முகூர்த்தங்கள் காரணமாக தோவாளையில் பூக்கள் விலை நேற்று கடுமையாக உயர்ந்திருந்தது. தவிர, வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு காரணமானது...

கடந்த இரு தினங்களுக்கு முன் கிலோ க்ஷீ120 க்கு விற்கப்பட்ட மல்லிகை 5 மடங்கு உயர்ந்து நேற்று க்ஷீ800க்கு விற்கப்பட்டது. இதே போல கிலோ க்ஷீ70க்கு விற்கப்பட்ட பிச்சி பூ, சுமார் 9 மடங்கு உயர்ந்து க்ஷீ600 ஆகவும், க்ஷீ40 க்கு விற்கப்பட்ட அரளி க்ஷீ100ஆகவும், க்ஷீ12க்கு விற்கப்பட்ட கேந்தி க்ஷீ35 ஆகவும் உயர்ந்திருந்தது. இந்த 5 மடங்கு விலை உயர்வு அதிர்ச்சி அளித்தது.
ரோஜாப்பூ ஒரு கட்டு க்ஷீ10ல் இருந்து க்ஷீ20 ஆகவும், வாடாமல்லி கிலோ க்ஷீ15ல் இருந்து க்ஷீ35 ஆகவும், கோழிப்பூ கிலோ க்ஷீ20ல் இருந்து க்ஷீ35 ஆகவும் உயர்ந்திருந்தது. தவிர, துளசி, பச்சை இலை போன்றவற்றின் விலையும் மிகவும் உயர்ந்து காணப்பட்டது. பூக்களின் விலை உயர்வு வியாபாரிகள், விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதேநேரம், திருமணம், விசேஷத்துக்கு பூ வாங்குவோருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment