
துரைப்பாக்கம் விநாயகா நகர் பிரதான சாலையில் எச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள், ஏற்கனவே ஏடிஎம்மில் இருந்த பணத்துடன் மேலும், ஸி10 லட்சத்தை வைத்துள்ளனர். ஒரிசாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (30) என்பவர் இங்கு காவலாளியாக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த ஸ்ரீகாந்த், அதிகாலையில் கண் அயர்ந்து தூங்கி விட்டார். அப்போது, முகமூடி அணிந்த மர்ம ஆசாமி, ஏடிஎம் மையத்துக்குள் புகுந்தான். ரகசிய குறியீடு எண் தெரிந்த அவன், ஏடிஎம் மெஷினை திறந்தான். வரிசையாக அடுக்கி வைத்திருந்த 4 பெட்டிகளில் 3 பெட்டியை மட்டும் திறந்து பார்த்தான். அதில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த ஸி20 லட்சத்து 76 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பி விட்டான். ஒரு பெட்டியை மட்டும் திறக்காமல் விட்டுச் சென்றதால், அதிலிருந்த ஸி2 லட்சம் தப்பியது. 4 நிமிடத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான்.
நேற்று அதிகாலை வங்கி சூப்பர்வைசர் தாமஸ் வந்தபோது, செக்யூரிட்டி ஸ்ரீகாந்த் தூங்கிக் கொண்டிருந்தார். ஏடிஎம் மெஷின் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஸ்ரீகாந்தை எழுப்பி விசாரித்தபோது, அவர் திருதிருவென விழித்தார்.
இதுகுறித்து வங்கி மேலாளர் சாம்பமூர்த்தி, துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். கூடுதல் கமிஷனர் தஞ்சை அரோரா, தி.நகர் துணை கமிஷனர் சண்முகவேல், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர், ஏடிஎம் மையத்தை பார்வையிட்டு, செக்யூரிட்டி ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினர். ஏடிஎம் மையத்தில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
ரகசிய குறியீடு எண்ணை தெரிந்து வைத்துக் கொண்டு கைவரிசை காட்டியிருப்பதால், வங்கி ஊழியர்களில் யாருக்காவது தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஏடிஎம் மையத்தில் கொள்ளை வங்கி ஊழியர் மீது சந்தேகம்
சென்னை: தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை திறந்து 21 லட்ச ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் வெளி நபர்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து இணை கமிஷனர் சக்திவேல் கூறியதாவது:
கார்டு பயன்படுத்தாமல் ஏடிஎம் கதவை திறக்கலாம். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஏடிஎம் மையம் வந்த கொள்ளையர்ரகசிய குறியீடு எண் மூலம் ^20 லட்சத்து 76 ஆயிரம் திருடியுள்ளான். முகத்தில் குல்லா போட்டுக்கொண்டு நுழைந்துள்ளான். முகம் தெரியாமல் இருப்பதற்காக அங்குள்ள கேமராவை துணியாமல் மறைத்துள்ளான. காவலாளி தூங்கிக்கொண்டு இருந்ததால் கொள்ளையை எளிதில் முடித்துள்ளனர். இந்த கொள்ளையில் வெளியாட்களுக்கு சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை. வங்கிக்கு தொடர்புடையவர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம். காவலாளிகளில் சிலர் சாப்பிட சென்று விடுகின்றனர். அந்த சமயத்தில் கொள்ளை நடக்க வாய்ப்பு உள்ளது. தூங்கும் காவலாளிகளை போலீசார் உஷார்படுத்துகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தி.நகர் துணை கமிஷனர் சண்முகவேல், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி ஆகியோர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்றார்.
No comments:
Post a Comment