Islamic Widget

September 12, 2010

அரசு அலுவலகங்களுக்கு தீ வைப்பு காஷ்மீரில் மீண்டும் கலவரம்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. அரசு அலுவலகங்களுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது. இதனால் பதற்றம் நிலவுகிறது.
காஷ்மீரில் பிரிவினைவாத ஆதரவு கும்பல்கள் கடந்த 3 மாதங்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. கலவரத்தை ஒடுக்கும் பணியில் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. ஸ்ரீநகர் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கலவரம் பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், கலவரக் கும்பல்கள் அமைதியாவதும், மீண்டும் வன்முறையில் ஈடுபடுவதும் தொடர்கிறது.இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகைக்காக நேற்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்தது. ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தொழுகை நடத்தினர்.

தொழுகைக்குப் பிறகு மக்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மசூதிக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத் தியது. போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தது. இதனால், பெரும் பதற்றம் ஏற்பட்டது. கலவரத்தை தடுக்கவும், கும்பலை விரட்டவும்  போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனால் சிதறி ஓடிய கூட்டம், அருகில் இருந்த அரசு அலுவலகங்களுக்கு தீ வைத்தது.இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஹுரியத் மாநாட்டு கட்சியின் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின் ஆதரவாளர்களும், மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களும்தான் போலீசார் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்’ என்றார்.
இதற்கிடையே, ஹுரியத் மாநாட்டு கட்சியின் மிதவாத பிரிவு தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் தலைமையில் ஈத்காவில் நேற்று நடைபெற்ற தொழுகையில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு பேசிய அவர், ‘போலீசார் சமீபத்தில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியான சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க, லால் சவுக்கில் அரை மணி நேரம் தர்ணா நடத்த அனைவரும் வர வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து, தொழுகையில் கலந்து கொண்டவர்கள் லால் சவுக் சென்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் மாநிலத்தில் கலவரம் தொடர்வது மத்திய அரசுக்கு கவலை அளித்துள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் விரும்புகிறார். இது பற்றி ஆலோசிக்க, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அவசரக் கூட்டம் டெல்லியில் நாளை கூட்டப்படுகிறது. இதில், காஷ்மீர் மாநிலத்தின் இப்போதைய நிலவரம், அந்த மாநிலத்தில் பாதுகாப்பு படைக்கு கொடுக்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தின் ஒரு பகுதியை வாபஸ் பெறுவது உட்பட பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்துக்குப் பிறகு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment