கடலூர் : மாவட்டம் எல்லையில் ஏழு இடங்களில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டு துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் கடத்தி வரப்படும் மது பாட்டில்கள், சாராயம், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்படும்
பணம் ஆகியவற்றை கண்காணிக்க கடலூர் ஆல்பேட்டை, சிதம்பரம் வல்லம்படுகை, மங்களம்பேட்டை பில்லூர் கிராஸ்ரோடு, சோழதரம் மாமங்கலம், பண்ருட்டி கண்டரக்கோட்டை, மேல்பட்டாம்பாக்கம் மாளிகைமேடு, ராமநத்தம் கூட்டுரோடு ஆகிய ஏழு இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தலா ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று போலீசார், ஐந்து துணை ராணுவத்தினர் இரண்டு ஷிப்டுகளாக 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Source: dinamalar

No comments:
Post a Comment