கடலூர் : கடலூரில் இலவச "டிவி'க்கள் வைக்கப்படிருந்த அறைகளுக்கு "சீல்' வைக்கப்பட்டது. கடலூர் நகராட்சி பகுதிக்கு முதல் கட்டமாக வரவழைக்கப்பட்ட 24 ஆயிரத்து 797 "டிவி'க்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. "டிவி' கிடைக்காதவர்களுக்கு தேர்தலுக்குப் பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வழங்கப்படாத மீதமுள்ள "டிவி'க்கள் மற்றும் அதன் பின்னர் வந்த "டிவி'க்கள் என அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதற்கிடையே தேர்தல் நன்நடத்தை விதி முறை மீறல் நடைபெறாமல் இருக்க தாலுகா அலுவலக புதிய கட்டடம், குண்டுசாலை சமுதாயக்கூடம், திருப்பாதிரிப்புலியூர் ரெட்டிச்சத்திர கட்டடம், தங்கராஜ் நகரில் நகாட்சி சுகாதார கட்டடம் ஆகிய இடங்களில் உள்ள 7,000 "டிவி' க்கள் உள்ள அறைகளை கடலூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அசோகன் "சீல்' வைத்தார். விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 228 "டிவி'க்கள் உள்ள அறைக்கு தொகுதி தேர்தல் அதிகாரி முருகேசன் சீல் வைத்தார்.
Source: dinamalar

No comments:
Post a Comment