Islamic Widget

March 11, 2011

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க., வில் ஆதரவாளர்களுக்காக 50 பேர் மனு

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க., வில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் மனு கொடுத்துள்ளனர். தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் கேட்டு வருகின்றனர். தி.மு.க., சார்பில் போட்டியிட ஒன்றியக்குழு தலைவர்கள் செந்தில்குமார், முத்துபெருமாள், மாமல்லன் மற்றும் முன்னாள் எம். எல்.ஏ., சரவணன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் உட்பட 29 பேர் சீட்டு கேட்டு விருப்பமனு கொடுத்துள்ளனர்.
 அதில் செந்தில்குமார், முத்துபெருமாள், மாமல்லன், முன்னாள் எம்.எல். ஏ., சரவணனுக்கு என ஒவ்வொருவருக்கும் 10க்கும் மேற்பட்டோர் பரிந்துரை செய்து கட்சி தலைமையில் மனு கொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment