கடலூர் : கடலூர் சிப்காட்டில் கசிந்த புரோமின் வாயுவை அகற்றி விட்டதால் கிராம மக்கள் அச்சமின்றி வீடுகளுக்குச் செல்லலாம் என ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலூர் சிப்காட்டில் உள்ள சாஷன் கம்பெனியில் கடந்த 7ம் தேதி இரவு கசிந்த புரோமின் வாயுவால் சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு மயக்கம், கண் எரிச்சல் உபாதைகளுக்கு ஆளாகினர். மேலும் 83 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் முதன்மை துணை ஆய்வாளர் தங்கராசு, மாசுக்கட்டுப்பாடு வாரிய கோட்டப் பொறியாளர் ராஜா ஆகியோர் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னையில் இருந்து வந்த தலைமை விஞ்ஞானியால் தொழிற்சாலை, குடிகாடு கிராம பகுதிகளும் புரோமின் வாயு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டன. அதில் காற்றில் புரோமின் அளவு பூஜ்ஜியம் என்ற அளவில் கண்டறியப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து வந்த பன்னாட்டு எஸ்.ஜி.எஸ் என்ற ஏஜன்சியால் தொழிற்சாலைகளை சுற்றி காற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இனி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எவ்வித பயமின்றி வீடுகளுக்கு செல்லலாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment