கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 265 "பிடிவாரண்ட்' குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்த பலர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர்.
இவர்களில் பலர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் நேரத்தில் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதனையொட்டி, கோர்ட் "பிடிவாரண்ட்' பிறப்பித்து நிலுவையில் உள்ள 265 பேரை மூன்று நாளில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகளை நிறைவேற்ற பயிற்சி ஏ.எஸ்.பி., விஜயகுமார், பயிற்சி டி.எஸ்.பி., கீதா தலைமையில் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதில் 45 வயதிற்குட்பட்ட சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஆயுதப்படை போலீசார் ஒருவர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் வழக்குகளில் நிலுவையில் உள்ள "பிடிவாரண்ட்' மூன்று நாளில் பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Source: dinamalar

No comments:
Post a Comment