Islamic Widget

September 12, 2010

பரங்கிப்பேட்டையில் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடந்தது. பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட் டம் நடந்தது. ஒன்றிய தலைவர் முகமது ஆசாத் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணி, மஞ்சுளா முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் இளம்பாரதி, விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ராஜாராமன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜேந்திரன், சாமுவேல், ஜீவா, முகமது நாசர் உட்பட பலர் பங்கேற் றனர்.

No comments:

Post a Comment