Islamic Widget

September 11, 2010

மணமகளின் தந்தை கைலி அணிந்து வந்ததால் தடைபட்டது திருமணம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் மணமகளின் தந்தை, கைலி அணிந்து வந்ததால் ஏற் பட்ட தகராறில் நேற்று நடைபெற இருந்த சினிமா இசைக்கலைஞரின் திருமணம், தாலி கட்டும் நேரத் தில் நின்று போனது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கீழவன் னியூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் பத்மாவதி (30). சிதம்பரம், எம்.கே., தோட்டம் விவேகானந்தம் மகன் சதீஷ்குமார் (32); சினிமா இசைக்கலைஞர். இருவருக்கும் கடந்த ஜூலை 11ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமியம் மன் சன்னிதியில் காலை திருமணமும், மாலை தெற்கு வீதியில் உள்ள மண்டபத்தில் வரவேற்பும் நடக்க இருந்தது.

நேற்று முன்தினம் இரவு மணப்பெண் மற்றும் உறவினர்கள் சிதம்பரம் வந்து தங்கினர். நேற்று காலை 6 மணி முதல் 7.30க்குள் முகூர்த்தம் என்பதால் மணமக்கள் திருமண கோலத் தில் கோவிலுக்கு வந்தனர்.அப்போது மணமகளின் தந்தை செல்வராஜ் கைலி அணிந்து வந்தார். இதை பார்த்த மணமகன் சதீஷ் குமாரின் அக்கா நர்மதா, "நிச்சயதார்த்தம் அன்று கைலியுடன் வந்து எங் களை அவமானப்படுத்தினீர்கள், திருமணத்திற்கும் நாகரிகம் தெரியாமல் கைலியுடன் வந்துள்ளீர் களே' என, கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், "நாகரிகம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்' என கேட்க, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் விரக்தியடைந்த மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அதில் "திருமணத்திற்கு முன்பே தகராறு செய்யும் குடும் பத்தில் வாழ முடியாது. திருமணத்தில் விருப்பம் இல்லை' என மணமகள் தெரிவித்தார்.அவர்களைத் தொடர்ந்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தார், போலீஸ் நிலையம் வந்து சமரசம் பேசினர். ஆனால், இறுதி வரை மணமகள் வீட்டார் சமாதானம் அடையவில்லை. அதையடுத்து, இருவீட்டாரும் ஒருவருக் கொருவர் கொடுத்த புத்தாடைகள் உள்ளிட்ட பொருட் களை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு திரும்பினர்.மாலை சென்னையில் இருந்து முக்கிய பிரமுகர் கள் வரவேற்புக்கு வருவர் என்பதால், மணமகனுக்கு அதற்குள் திருமணத்தை நடத்திவிடவேண்டும் என, உறவினர் வழியில் உடனடியாக மணமகளை தேடுவதில் மணமகன் வீட்டார் தீவிரமாக இறங் கினர்.

No comments:

Post a Comment