பரங்கிப்பேட்டை : இடப்பிரச்னையில் மூன்று பேரை கட்டையால் தாக்கிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமாருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. ராஜேந்திரனை, ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஹேமாவதி இருவரும் கட்டையால் தாக்கினர். அதனை தடுக்க வந்த ராஜேந்திரனின் சகோதரர் சத்தியானந்தம், அவரது மனைவி பாக்கியலட்சுமியையும் தாக்கினர். இதுகுறித்த ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் வழக்கு பதிந்து ஜெயக்குமார் (40), ஹேமாவதி (35) இரண்டு பேரையும் கைது செய்தார்.
Source: Dinamalar
No comments:
Post a Comment