பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பூவாலை கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ளது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். பள்ளி எதிரே பெரிய பள்ளம் உள்ளதால் கழிவு நீரும், மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த இடம் சேரும் சகதியுமாக இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி எதிரே உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source: Dinamalar
No comments:
Post a Comment