Islamic Widget

September 05, 2010

வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது என மாவட்ட பேருந்து போக்குவரத்து பொது தொழிலா ளர் சங்கம் அறிவித் துள்ளது.

இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் பண்டரிநாதன் விடுத்துள்ள அறிக்கை: தனியார் பஸ் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்க வேண்டும். அதன்படி டிரைவர்களுக்கு 13 நாள் பணிக்கு 5 ஆயிரத்து 966 ரூபாயும், கண்டக்டர்களுக்கு 5 ஆயிரத்து 818 ரூபாயும் வழங்க வேண்டும்.

இந்த சம்பளத்தை கடலூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த நேற்று கடலூரில் தொழிலாளர் அலுவலர் கமலக்கண்ணன் முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உரிமையா ளர் சங்கம் சார்பில் மாவட்ட பஸ் உரிமையா ளர் சங்க தலைவர் தேசிங் குராஜன், கடலூர், பண்ருட்டி தாலுகா பஸ் உரிமையாளர் சங்க தலைவர் வேலவன், செயலாளர் கருணாகரன் ஆகியோரும், தொழிற் சங் கம் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சேகர், தனியார் பஸ் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பண் டரிநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவும்,தமிழக அரசு பஸ் கட்டண உயர்வு வழங்காததாலும் சம்பள உயர்வை வழங்க பஸ் உரிமையாளர் சங்கத்தினர் மறுத்துவிட்டனர். இதனைக் கண்டித்தும், அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வலியுறுத்தி வரும் 7ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத் தம் செய்ய தனியார் பஸ் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக வரும் 7ம் தேதி மாவட் டத்தில் தனியார் பஸ்கள் ஓடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Source: Dinamalar

No comments:

Post a Comment