வாஷிங்டன்: ரோடுகளில் செல்போனில் பேசிக்கொண்டு கார்களை ஓட்டிச் செல்வதால் ஏற்படும் இறப்போரின் எண்ணிக்கை 16 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது என நார்த் டெக்ஸாஸ் ஹெல்த் சைன்ஸ் மையத்தை சேர்ந்த பெர்னான்டோ வில்சன் மற்றும் ஜிம் ஸ்டிம்சன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 2001 மற்றும் 2007 ஆண்டிற்குள் சுமார் 16 ஆயிரம் பேர் வரை இத்தகைய செயலால் தங்களின் உயிரை இழந்துள்ளனர் . மேலும் அமெரிக்காவின் போக்குவரத்து துறையினர் 1950-ல் இருந்து 2009 வரையிலான 50 வருட காலகட்டத்தில் மகி குறைந்த அளவாக 33 ஆயிரத்து 963 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.நாட்டில் ஒரு மில்லியன் புதிய செல்போன் உபயோ கிப்பாளர்கள் உருவாகிறார்கள் .அதில் 19 சதவீத அளவிற்கு இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டை காட்டிலும் 2008 ஆண்டு வரை 10.9 சதவீதத்தில் இருந்து 15.8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த 2008-ல் 5 ஆயிரத்து 870 பேர் வரை சாலை விபத்தினால் இறந்துள்ளனர். மேலும் தனது ஆய்வின் முடிவில் செல்போனை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவியை பொருத்தலாம் என்று கூறினாலும் அதற்கு பதிலாக பேச்சுக்களை குறைக்கவாவது வழி ஏற்படுத்தலாம் என தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment