சிதம்பரம் : சிதம்பரத்தைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவரின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணியை பாராட்டி மாநில அளவிலான சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. சிதம்பரம் அகோரம் எடிசன் பள்ளியில் நான் காம் வகுப்பு மாணவர் குருவிஷ்ணு (9). சுற்றுச் சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட் டுள்ளார். இவர் கடலூர், விழுப்புரம், நாகை மாவட் டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிகள், 5க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பொது இடங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புவி வெப்பமடைதலுக்கான காரணங் கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தனக்கு கிடைக் கும் பரிசுத் தொகையில் இதுவரை 2,500 மரக்கன்றுகளை பள்ளிகள் மற்றும் மக்களுக்கு வழங்கினார்.
மாணவரின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணியைப் பாராட்டி சுற்றுச்சூழல் துறை சார்பில் மாநில அளவிலான சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டுள் ளது. நாகர்கோவிலில் நடந்த விழாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் மைதீன்கான் விருதை மாணவர் குருவிஷ்ணுவுக்கு வழங்கினார். உடன் சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், சென்னை சுற்றுச்சூழல் துணை இயக் குநர் சீனுவாசமூர்த்தி, கன் னியாகுமரி கலெக்டர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் இருந்தனர்.
Source: Dinamalar
No comments:
Post a Comment