பரங்கிப்பேட்டை:பஸ் பயணியின் நான்கு சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வானூர் அடுத்த மொம்மையார்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன் (32). இவரது மனைவி திவ்யா (27). இவர்,
பரங்கிப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து அரசு டவுன் பஸ்சில் கடலூர் முதுநகருக்கு வந்தார். பின், இங்கிருந்து மற்றொரு பஸ்சில் ஏறி கடலூர் பஸ் நிலையம் சென்றார். புதுச்சேரி செல்லும் பஸ்சில் ஏறிய போது, தான் கொண்டு வந்த பையை பிரித்து பார்த்தார். அப்போது அதிலிருந்த மோதிரம், நெக்லஸ் என நான்கு சவரன் நகைகள், மொபைல் மற்றும் 1000 ரூபாயை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தார். திருட்டு போன பொருட்களின் மதிப்பு 42 ஆயிரம் ரூபாய் ஆகும். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து நகைகளை திருடிச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
source: dinamalar

No comments:
Post a Comment