செங்கடல் நகரான ஜெத்தாவில் சுமார் 8 மில்லியன் சவூதி ரியால்கள் மதிப்புடைய 40 கிலோகிராமுக்கு மேற்பட்ட தங்கநகைகளும், அணிகலன்களும் காவல்துறை சோதனை ஒன்றில் பிடிபட்டுள்ளன. இது தொடர்பாக, காவல்துறை இரு பாகிஸ்தான் நாட்டவரையும், ஒரு சவுதியரையும் கைதுசெய்துள்ளது. இவ்வளவு விலைஉயர்ந்த ஆபரணங்களை அவர்கள் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி அவர்கள் கொண்டுசென்றதால் பிடிபட்டுள்ளனர்.
ஜெத்தாவின் அல்நுஸ்ஹா காவல்நிலையம் இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்கிறது என்று ஜெத்தா காவல்தொடர்பு அதிகாரி பிரிகேடியர் மிஸ்ஃபர் அல்ஜிஆயித் தெரிவித்துள்ளார். இத்தனை மதிப்பு மிக்க ஆபரணங்களை எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி எடுத்துச்சென்றது ஏன் என்பதற்கான சரியான காரணத்தையோ, அதற்கான முறையான ஆவணங்களையோ கைது செய்யப்பட்டவர்கள் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டதால், சாலையின் எல்லா வாகனச் சோதனைச் சாவடிகளிலும் குறிப்பிட்ட அந்த வாகனத்தில் வந்தவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். ஒரு சோதனைச்சாவடியில் வாகனம் முழுவதும் மீளவும் சோதிக்கப்பட்டதில் மாட்டிக்கொண்டனர்
சவூதி அரேபியாவின் தென்பகுதியான மஹாயில் அசீர் என்னுமிடத்திலிருந்து இந்த ஆபரணங்களைக் கொண்டு வந்ததாக, கைதுசெய்யப்பட்டவர்கள் கூறினர், எனினும் அந்நகைகள் எவ்வகையில் பெறப்பட்டவை என்பது குறித்து அவர்கள் ஏதும் தெரிவிக்கவில்லையாம்.
மேல்விசாரணை நடைபெற்று வருகிறதாம்
No comments:
Post a Comment