Islamic Widget

March 17, 2011

அதிமுக கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி!மூன்றாவது அணி உதயமாகுமா?

அதிமுக கூட்டணியில் தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,புதிய தமிழகம் மற்றும் சமத்துவ மக்கள் கட்சிக்கு தொகுதிகளைப் பிரித்துக் கொண்டிருக்கும் முன்பே 160 தொகுதிகளுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது.
அதிமுக தலைமையின் தன்னிச்சையான முடிவால் தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன. தேமுதிக கேட்டு வந்த 41 தொகுதிகளில் 21 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளதால் தேமுதிக கோபம் அடைந்துள்ளது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற 6 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். அது போல மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது இடது சாரிகளை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து விவாதிக்க இரு கட்சிகளும் இன்று அவசர கூட்டத்தை கூட்டியுள்ளன. சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார் தென்காசி தொகுதியைக் கேட்டு வந்ததாகவும் தென்காசி தொகுதி வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப் பட்டதில் சரத்குமாரும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப் படுகிறது. புதிய தமிழகம் கிருஷ்ண சாமியும் இரு தொகுதிகளுக்கு மேல் வேண்டும் என்று கேட்ட வந்தநிலையில் புதிய தமிழகம் கேட்ட ஓட்டப்பிடாரம், வாசுதேவ நல்லூர் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தங்கள் அதிருப்தியை வெளிப் படுத்தியுள்ள நிலையில் மீண்டும் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டு சிக்கலில் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறும் நிலையில் உள்ள மதிமுக மற்ற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.


Source: inneram

No comments:

Post a Comment