Islamic Widget

March 09, 2011

அடுத்த மாதம் 125சிசி டிஸ்கவர் பைக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டம்

டெல்லி: விற்பனையை உயர்த்தும் வகையில் மேலும் ஒரு புதிய டிஸ்கவர் பைக்கை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.பஜாஜ் ஆட்டோவின் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் டிஸ்கவர் பைக், கடந்த 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்சரின் பேஸ் மாடலை அடிப்படையாக கொண்டு 125சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் டிஸ்கவர் முதலில் வெளிவந்தது.
பின்னர் சந்தையின் நிலவரங்களுக்கு தக்கவாறு 135சிசி மற்றும் 150 சிசி ரகங்களை சேர்ந்த டிஸ்கவர் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில், உலகப் பொருளாதார சரவு காரணமாக குறைந்த விலை கொண்ட 100சிசி டிஸ்கவர் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.வாகன விற்பனை கடுமையாக சரிந்த நிலையிலும், 100சிசி டிஸ்கவர் பைக்குகள் பஜாஜுக்கு கைகொடுத்தன. மேலும், விற்பனையிலும் 100சிசி டிஸ்கவர் பைக்குகள் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. இந்நிலையில், டிஸ்கவரின் விற்பனையை உயர்த்துவதற்கு ஏதுவாக புதிய டிஸ்கவரை அறிமுகப்படுத்த பஜாஜ் திட்டமிட்டுள்ளது.தற்போது, மாதத்திற்கு சராசரியாக 1.25 லட்சம் டிஸ்கவர் பைக்குகள் விற்பனையாகி வருகின்றன. இதை 1.65 லட்சமாக உயர்த்த பஜாஜ் புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை எட்டும் வகையில், மார்க்கெட்டில் தற்போதுள்ள 100சிசி மற்றும் 150சிசி மாடல்களுக்கு இடைப்பட்ட 125சிசி டிஸ்கவர் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது.அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ள 125சிசி டிஸ்கவர் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் மாடல்களில் வர உள்ளது. டிரம் பிரேக் மாடல் ரூ.44,000 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.47,000 எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய 125சிசி டிஸ்கவர் 150சிசி டிஸ்கவரின் விலையைவிட ரூ.1,000 மட்டுமே குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment