Islamic Widget

June 10, 2011

காவல்துறையை எதிர்கொள்ளவே ஆயுதப் பயிற்சி - ராம்தேவ் உதவியாளர்

டெல்லி ராம்லீலா மைதானத்தில் காவல்துறை கண்மூடித்தனமாக நடந்து கொண்டதால் த‌ற்கா‌ப்பு‌க்காக த‌ங்களைப் பாதுகா‌த்து‌க் கொ‌ள்ள இளைஞ‌ர் படைக‌ளை உருவா‌க்குவது அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌திரானத‌ல்ல எ‌ன்று ரா‌ம்தே‌‌வ் அற‌‌க்க‌ட்டளை ‌விள‌க்க‌ம் அ‌றி‌த்து‌ள்ளது.
ஹ‌ரி‌த்வா‌ரி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ரா‌ம்தே‌வி‌ன் உத‌வியாள‌ர் ஆ‌ச்சா‌‌ர்யா பால‌கிரு‌ஷ்ண‌ன், பத‌ஞ்ச‌லி அற‌க்க‌ட்டளையின் சீடர்கள் இதுவரை வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌த்‌தி‌ல்லை. ஆனா‌ல் ரா‌ம்‌லீலா மைதான‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யி‌ன் கா‌ட்டு‌மிரா‌‌ண்டி‌த்தன‌த்தை நேரடியாகக் கண்ட‌பிறகு த‌ற்கா‌ப்பு அவ‌சிய‌ம் எ‌ன்பதை ரா‌ம்தே‌வ் உண‌ர்‌ந்து‌‌ள்ளார். அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு உ‌ட்ப‌ட்டே 11,000 பேரு‌க்கு ஆயுத‌ப் ப‌யி‌ற்‌சி வழ‌ங்குவதென முடிவு செ‌ய்‌திரு‌ப்பதாக ஆ‌ச்சா‌‌‌ர்யா தெரிவித்தார்.கா‌‌ந்‌திய வ‌ழி‌யி‌ல் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்தவ‌ர்க‌ள் ‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் நட‌த்‌திய தா‌க்குத‌ல்தா‌ன் அர‌‌சிய‌ல் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌திரானது எ‌ன்றும், காவ‌ல்துறை‌ தா‌க்குத‌லி‌ல் யா‌ரு‌ம் காய‌மடைய‌வி‌ல்லை எ‌ன்று ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் க‌பி‌ல்‌சிப‌ல் தெ‌ரி‌வி‌த்‌‌திரு‌ந்த ‌நிலை‌யி‌ல், பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டவ‌ர்களு‌க்கு ‌நிவாரண உத‌வி வழங்கப்படு‌ம் எ‌ன்று உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கூ‌றி‌யிரு‌ப்பதால் ம‌த்‌திய அரசு குழ‌ப்ப‌த்‌தி‌ல் இரு‌ப்பதாகவும் அவ‌ர் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

No comments:

Post a Comment