அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்று மாலைக்குள் முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற கட்சியின் மாநில நிர்வாக குழுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவு இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு இல்லை என்றும் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment