Islamic Widget

September 26, 2010

கல்விக்கட்டணம் அவசர கதியில் எடுத்த முடிவு : மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சங்கம் எதிர்ப்பு

கடலூர் : நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவாக உள்ளது என, மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கத் தலைவர் கூறினார்.

கடலூர் மாவட்ட மெட் ரிக் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கக் கூட்டம், கடலூரில் நேற்று நடந்தது. சிதம்பரம் லட்சுமிகாந்தன் தலைவராகவும், வீனஸ் குமார் செயலராகவும், சிவகுமார் பொருளாளராகவும், ஜெகன்நாதன் துணைத் தலைவராகவும், டாக்டர் ராஜேந்திரன் காப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்திற்கு பின், மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கத் தலைவர் லட் சுமிகாந்தன் கூறியதாவது: கடலூர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கம் இன்று(நேற்று) துவங்கப்பட் டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் இச்சங்கம் அவசியமாகிறது. இம்மாவட்டத்தில் 140 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. நீதிபதி கோவிந்தராஜன் குழு சிபாரிசு செய்த கல்விக் கட்டணம் பொருத்தமானதாக இல்லை. அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவாக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரம் பள்ளிகளுக்கு, ஒரு மாதத்திலேயே கட்டணம் எவ்வாறு நிர்ணயம் செய்ய முடியும்.
பள்ளியில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் போது பள்ளிக்குத் தேவையான நிலம், கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி சாதனங்கள், வளர்ச்சி நடவடிக்கைகள், ஆசிரியர் அலுவலரின் உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி சாதனங்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்து பரிசீலிக்க வேண் டும். அதிக கல்விக் கட்டணம் வாங்கும் பள்ளிகள், மாவட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளன.
இதுபோன்ற பள்ளிகளை, கட்டணத்தை குறைக்குமாறு சங்கத்தின் சார்பில் வலியுறுத்துவோம். இதற்கு கட்டுப்படவில்லையென்றால், அப்பள்ளிகளை இச்சங்கத் தில் இருந்து நீக்கி விட முடிவு செய்துள்ளோம். மெட்ரிக் பள்ளி அங்கீகாரம் எளிமையாக்கி விரிவுபடுத்தி மாவட்ட அளவிலேயே வழங்க வேண்டும்.

அனுமதி, அங்கீகாரம் என்ற இரட்டை நடைமுறையை மாற்றி, மத்திய அரசு கல்வித்துறை நெறிமுறைக்கேற்ப ஒரே தடவையில் அங்கீகாரம் வழங்கப் பட வேண்டும். மெட்ரிக் பள்ளிகளின் நிதிச்சுமையைக் குறைப்பதற்கும், மாணவர்களின் கட்டணத் தைக் குறைத்து பெற்றோருக்கு உதவவும், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குவதைப் போல் ஊதியம் மற்றும் இதர பணிச்சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கத் தலைவர் லட்சுமிகாந்தன் கூறினார்.

 
 Dinamalar 

No comments:

Post a Comment