 சென்னை: ஹஜ் பயணம் செல்லும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது. பயணத்தின்போது சவுதி அரேபியாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
சென்னை: ஹஜ் பயணம் செல்லும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது. பயணத்தின்போது சவுதி அரேபியாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வோருக்கான பயிற்சி முகாம், சூளை டிமெல்லோஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு பைத்துல் ஹூஜ்ஜாஜ் (ஹஜ் அவுஸ்) அலுவலகத்தில் 28ம் தேதி (நாளை மறுதினம்) தமிழிலும், 29ம் தேதி உருது மொழியிலும் நடைபெறுகிறது.
காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி முகாம் நடக்கும். மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படும்.
மேலும் விவரங்களுக்கு 28252519, 28227617 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
No comments:
Post a Comment