Islamic Widget

April 15, 2012

அநீதிக்கு எதிராக ஆர்பரித்த மக்கள் வெள்ளம்!


சிதம்பரம், ஏப்ரல் 14: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக சிதம்பரம் அருகே லால்புரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் மற்று மதரஸா கட்ட அனுமதி மறுத்து வரும் கடலூர் மாவட்ட காவல்துறை, வருவாய்த் துறை சங்பரிவார கும்பலை கண்டித்து 14.04.2012 அன்று சிதம்பரம் பேருந்து நிலையம் காந்திசிலை அருகில் "மாபெரும் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை மீட்பு போராட்டம்" மாவட்ட தலைவர் சகோ.முத்துராஜா தலைமையில் நடைப்பெற்றது.







இதில் மாநில பொதுச் செயலாளர் கோவை.ரஹ்ம்மதுல்லாஹ் கலந்து கொண்டு கண்டன் உரையாற்றினர். அவர் தனது உரையில் சம்மந்தப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரஸா கட்ட உடனே அனுமதி அளிக்கவில்லை எனில் தமிழகமே ஸ்தபிக்கும் அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டதை தொடரும் என்று தெரிவித்தார் என்றதும் போராட்ட களத்தில் அல்லாஹ் அக்பர் என்ற ஒலி வின்முட்ட ஒளித்தது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாவட்டத்தின் அனைத்து கிளைலிருந்தும் சுமார் இரண்டு ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் ஆலயத்தை எழுப்ப ஆர்பரித்தனர். பாதுகாப்பிற்காக ஏரளமான போலீசார் குவிக்கபட்டுயிருந்தனர்
மானியம் ஆடூர் ஊராட்சி தலைவர் சிவானந்தம் தன்னுடைய ஏராளமான ஆதரவாளர்களுடன் TNTJ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் உணர்விற்கு அளித்துள்ள பேட்டியில்:

இந்து முஸ்லிம் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் இந்த ஒற்றுமையை பிடிக்காத சங்பரிவார கூட்டம் ஏற்படுத்தும் குழப்பம்தான் இது
முஸ்லிகளுக்கு லால்புரம் MRV நகரில் மதரஸா கட்ட அரசு அனுமதித்தே ஆகவேண்டும். இல்லையேல் இந்த அநியாயத்தை எதிர்த்து நாங்களும் ஆர்பாட்டம் செய்வோம் என கூறினார்.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தினதந்தி பத்திரிக்கையில் போட்டோவுடனும் மற்றும் ஆர்பாட்டம் பற்றிய செய்திகள் அணைத்து முக்கிய பத்திரிக்கையிலும் செய்தியாக வந்துள்ளது , சில TV செய்திகளிலும் செய்தியாக வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

பிரச்சனை சுன்னத்ஜமாத் மதரசா பற்றியதாக இருந்தாலும் அது முஸ்லிம்களின் உரிமை அதை பறிக்க அரசாங்கத்திற்கு கூட உரிமை இல்லை என்ற அடிப்படையில் TNTJ நடத்திய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சுன்னத் ஜமாத்தினர் அனைவரும் பாராட்டினர்.

TNTJ தலைமையில் நடந்த இந்த வழிபாட்டு உரிமை மீட்பு ஆர்பாட்டத்தில் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் மற்றும் பல பள்ளிவாசல் இமாம்களும் , முத்தவல்லிகளும் பங்கேற்றனர் .

ஆர்பாட்டதிற்கான சிறப்பான ஏற்பாடுகளை சிதம்பரம் TNTJ கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். மாவட்டத்தின் அணைத்து கிளைகளிலிருந்தும் ஏராளமான வாகனங்களில் TNTJ வினர் வந்திருந்தனர். இறுதியில் மாவட்ட செயலாளர் நிஷார் அஹம்மது அவர்கள் நன்றி கூறினார்.




இன்ஷாஅல்லாஹ் விரைவில் அல்லாஹ்வின் ஆலயம் எழுப்ப அனைவரும் துஆ செய்யுங்கள்.

No comments:

Post a Comment