பரங்கிப்பேட்டை : தி.மு.க., வில் சிதம்பரம் தொகுதிக்கு நடந்த நேர்காணலில் யாருக்கு சீட்டு என்பது முதல்வர் அறிவிப்பார் என துணை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சிதம்பரம் தொகுதியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் போராடி வருகின்றனர்.
சேர்மன்கள் செந்தில்குமார், முத்துபெருமாள், மாமல்லன், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் உட்பட 31 பேர் சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளனர். அதற்கான நேர்காணல் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மதியம் நடந்தது. சீட்டு கேட்டு விருப்ப மனு கொடுத்த 31 பேரும் வரிசையாக நின்றுள்ளனர். அவர்களிடம் துணை முதல்வர் ஸ்டாலின், சிதம்பரம் தொகுதிக்கு 31 பேர் சீட்டு கேட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் தேர்தல் வேலையை கடுமையாக பாருங்கள். யாருக்கு சீட்டு என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என கூறி அனுப்பியுள்ளார். புவனகிரி தொகுதி நேர்காணலும் அப்படியே முடிந்ததாம்.
Source: dinamalar

//புவனகிரி தொகுதி நேர்காணலும் அப்படியே முடிந்ததாம்// தவறான தகவல், மேலும் விவரங்களுக்கு www.mypno.blogspot.com
ReplyDelete